Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

குமரி மக்களவை இடைத்தேர்தல் களத்தில் 12 பேர் - 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 81 பேர் போட்டி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை தொகுதியில் 12 வேட்பாளர்களும், 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 81 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

மக்களவை தொகுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,243 வாக்குச்சாவடிகளிலும் 15,71,651 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விஜய் வசந்த்- காங்கிரஸ் (கை சின்னம்), பொன் ராதாகிருஷ்ணன்- பாஜக (தாமரை), அனிட்டர் ஆல்வின்- நாம் தமிழர் (விவசாயி), சுபாசார்லஸ்-மநீம (டார்ச் லைட்), நாகூர் மீரான் பீர்முகமது (கேமரா), ராஜீவ் (ஆட்டோ ரிக்ஷா), டென்னிசன் (கிரிக்கெட் மட்டை), ஹவ்கின்ஸ் (மோதிரம்), தியோடர் சாம் (வைரம்), ஜூலியஸ் (கப்பல்), பால்ராஜ் (பானை), ஜெரோம் லூர்துராஜ் (புல்லாங்குழல்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் எஸ்.ஆஸ்டின்-திமுக (உதய சூரியன்), சுதாராமன்- பகுஜன் சமாஜ் (யானை), என்.தளவாய் சுந்தரம்- அதிமுக (இரட்டை இலை), சசிகலா- நாம் தமிழர் (விவசாயி), செந்தில்முருகன்-அமமுக (குக்கர்), பி.டி.செல்வகுமார்- மநீம (டார்ச் லைட்), அகஸ்டின் (வைரம்), சுந்தரநாதன் (தபால்உறை), சுபாஷ் (பச்சை மிளகாய்), செல்லையா பிள்ளை (பைனாகுலர்), தாணுநீலன் (கிரிக்கெட் வீரர்), மகேஷ் (விசில்), மாணிக்கவாசகம் பிள்ளை (கப்பல்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாகர்கோவில்

நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் எம்.ஆர். காந்தி- பாஜக (தாமரை), என்.சுரேஷ்ராஜன்- திமுக (உதயசூரியன்), அம்மு ஆன்றோ-அமமுக (குக்கர்), மரிய ஜேக்கப்ஸ்அடானி ராஜா- மநீம (டார்ச் லைட்), விஜயராகவன்-நாம் தமிழர் (விவசாயி), சதீஷ்குமார் (சிலிண்டர்), சுனில்குமார் (டம்ளர்), உஷா (காலனி), கண்ணன் (ஆட்டோ ரிக்சா), காந்தி (காலிபிளவர்), காந்திராஜ் (மிளகுசெடி), பாலசிவனேசன் (தென்னந்தோப்பு), பிரவீன்ராஜ் (மோதிரம்), மகிழ்ச்சி (மைக்), ரத்தினம் (ஏர் கண்டிஷனர்) போட்டியிடுகின்றனர்.

குளச்சல்

குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் அனீஷ்- பகுஜன் சமாஜ் (யானை), சிவகுமார்- தேமுதிக (முரசு), பிரின்ஸ்-காங்கிரஸ் (கை), ரமேஷ்-பாஜக (தாமரை), ஆன்றணி ஆஸ்லின்-நாம் தமிழர் (விவசாயி), லதீஸ் மேரிஷா- மநீம (டார்ச்லைட்), அந்தோணி முத்து (மூன்று நட்சத்திர கொடி), கிருஷ்ணகுமார் (கண்ணாடி டம்ளர்), ராஜா (சீர்வரிசை சாதனம்), முகம்மது அலி (அரவை சாதனம்), மேரிஸ்டெல்லா (ஆட்டோ ரிக்சா), விஜயகுமார் (பானை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பத்மநாபபுரம்

பத்மநாபபரம் சட்டப்பேரவை தொகுதியில் மனோ தங்கராஜ்- திமுக (உதயசூரியன்), லதா-பகுஜன் சமாஜ் (யானை), ஜாண் தங்கம்-அதிமுக (இரட்டை இலை), சீலன்- நாம் தமிழர் (விவசாயி), ஜெங்கின்ஸ்- அமமுக (குக்கர்), ஜெயராஜ்-மநீம (டார்ச்லைட்), அஞ்சலோஸ் (சேப்டி பின்), குளோரிசெல்வி (ஹெல்மெட்), செய்யதுஅலி (மோதிரம்), நாகராஜன் (சேவிங் மிஷின்), மதன்(டெலிவிஷன்), ராபர்ட் சிங் (தொப்பி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கிள்ளியூர்

கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதியில் சிவகுமார்-பகுஜன் சமாஜ் (யானை), ராஜேஷ்குமார்- காங்கிரஸ் (கை), ஜூட்தேவ்-அதிமுக (இரட்டை இலை), அந்தோணி-சமக (டிராக்டர் விவசாயி), சீமா-அமமுக (குக்கர்), பீட்டர்-நாம் தமிழர் (விவசாயி), தங்கப்பன் (டியூப் லைட்), விஜிகுமார் (ஏர்கண்டிஷனர்), ஜெயராஜ் (மோதிரம்), அஞ்சலாஸ் (ஆட்டோ ரிக்சா), சிவன்ராஜ் (காலிபிளவர்), ரமேஷ் ராஜகுமார் (புல்லாங்குழல்), ஜாண் பெனடிக்ட் (ஹெல்மெட்), ஷாஜூ சிங் (பலூன்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு

விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் ஐடன்சோனி- தேமுதிக (முரசு), விஜயதரணி-காங்கிரஸ் (கை), ஜெயசீலன்-பாஜக (தாமரை), மேரிஆட்லின்-நாம் தமிழர் (விவசாயி), ராஜகுமார்-மநீம (டார்ச் லைட்), ராஜேஷ்குமார் (சீர்வரிசை சாதனம்), வசந்தீஸ்வரன் (வைரம்), வில்சன் (ஆட்டோ ரிக்சா), அமோஸ் (தையல் இயந்திரம்), சதீஷ் (தொப்பி), சாமுவேல் ஜார்ஜ் கலையரசர்( கிரிக்கெட் மட்டை), மரிய செல்வன் (பானை), மோகன்குமார் (காலணி), ராஜமுருகன்(அலமாரி), விஜயகுமார் (புல்லாங்குழல்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை தொகுதியில் 12 வேட்பாளர்களும், 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 81 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 15,71,651 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x