Published : 06 Apr 2021 03:15 am

Updated : 06 Apr 2021 03:15 am

 

Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 120 பேர் போட்டி :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 120 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் தலா 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வைகுண்டம் தொகுதியில் 21 வேட்பாளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 17 வேட்பாளர்களும், விளாத்திகுளம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் தலா 15 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னம் விவரம்:

விளாத்திகுளம்


போ.சின்னப்பன்-அதிமுக (இரட்டை இலை), அ.மாணிக்க ராஜா- பகுஜன் சமாஜ் கட்சி ( யானை), வ.மார்க்கண்டேயன்- திமுக (உதயசூரியன்), கு.கருப்பசாமி (டிராக்டர் இயக்கும் உழவன்), மு.காந்தி மள்ளர் (வாளி), கா.சீனிச்செல்வி- அமமுக (பிரஷர் குக்கர்), பாலாஜி- நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), செ.மாரிமுத்து (பரிசு பெட்டகம்), செ.முத்துகுமார்- புதிய தமிழகம் கட்சி (தொலைக்காட்சி பெட்டி), சே.வில்சன்- சமக (மின்கல விளக்கு), கா.ஆறுமுக பெருமாள் (தென்னந்தோப்பு), ச.ஆறுமுகம் (மோதிரம்), சு.செல்லத்துரை (கண்ணாடி தம்ளர்), ம.முருகானந்தம் (கப்பல்), பெ.ராஜாமணி(ஈட்டி எறிதல்).

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கான பொருட்களை பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.படம்: என்.ராஜேஷ்அ.அசோக்குமார்- பகுஜன் சமாஜ் (யானை), பெ.கீதாஜீவன்- திமுக (உதயசூரியன்), உ.சந்திரன்- தேமுதிக (முரசு), எஸ்.டி.ஆர்.விஜயசீலன்- தமாகா (இரட்டை இலை), ந.சுந்தர்- சமக (மின்கல விளக்கு), செ.சுபாஷ் (உலங்கு வானூர்தி), கி.சுப்பிரமணி (புல்லாங்குழல்), க.செல்வவிநாயகம் (சிறு உரலும் உலக்கையும்), என்.பாலசுப்பிரமணியன் ( பலாப்பழம்), மன்னர் மகாராஜன் (வாளி), வி.ராஜசேகர் ( டிராக்டர் இயக்கும் உழவன்), வே.வேல்ராஜ்- நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), ஜே.அருண் நேருராஜ் (கால்பந்து), ஆல்டிரின் ஏர்மார்ஷல் தயாராம் (வைரம்), செ.கணேஷ் அய்யாத்துரை (கிரிக்கெட் மட்டை), சு.கிருஷ்ணன் (குளிர்பதனப் பெட்டி), கோ.சாமுவேல் (ரொட்டி), ஜே.சிவனேஸ்வரன் (பலூன்), ஜா.செல்வம் (பெட்டி), சி.பாலசுந்தரம் (அலமாரி), லூ.மரிய தேவசகாய ஜானி (பாய்மரப்படகு), ஏ.முகமது இம்ரான் அரபி (பிஸ்கெட்), ராம குணசீலன் ( சிலிண்டர்), ஆ.ராஜவேல் (தீப்பெட்டி), ம.லிங்கராஜா (மின் கம்பம்), அ.ஜெயலலிதா (கரும்பலகை).

திருச்செந்தூர்

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்- திமுக (உதயசூரியன்), மு.ராதா கிருஷ்ணன்- அதிமுக (இரட்டை இலை), செ.குளோரியான்- நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), க.கென்னடி பாபு (சிறு உரலும் உலக்கையும்), சே.ரூஸ்வெல்ட் (டிராக்டர் இயக்கும் உழவன்), எஸ்.வடமலைபாண்டியன்- அமமுக (பிரஷர் குக்கர்), மு.ஜெயந்தி- சமக (டார்ச் லைட்), சு.ஆறுமுகம் (ஊதல்), இசக்கி முத்து (ஆட்டோ ரிக்க்ஷா), ரா.கல்யாணசுந்தரம் (கண்காணிப்பு கேமரா), சே.செந்தில்குமார் (பட்டாணி), பி.எஸ்.ஜே.சேகு அப்துல் காதர் (வைரம்), சா.பாஸ்கர் (கிரிக்கெட் மட்டை), கு.பெருமாள் (டென்னிஸ் மட்டையும் பந்தும்), செ.பொன் ரத்ன செல்வன் (மின் கம்பம்).

வைகுண்டம்

ஊர்வசி செ.அமிர்தராஜ் - காங்கிரஸ் (கை), எஸ்.பி.சண்முகநாதன்- அதிமுக (இரட்டை இலை), பா. அருண்- புதிய தமிழகம் (டிவி பெட்டி), அருள்மதி ஏசுவடியாள் (குழல் விளக்கு), எஸ்.ரமேஷ்- அமமுக (குக்கர்), ஆர்.சந்திரசேகர்- மக்கள் நீதி மய்யம் (டார்ச் லைட்), பே.சுப்பையா பாண்டியன்- நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), சு.சுரேஷ் பெருமாள் (டிராக்டர் இயக்கும் உழவன்), பீ.ஜெகன் (தொப்பி), பா.ஆல்வின் துரைசிங் (பீரோ), க.இசக்கிராஜா (பலூன்), ரா.கிருஷ்ணவேல் (கிரிக்கெட் மட்டை), ம.சங்கர சுப்பிரமணியன் (வைரம்), ஜி.சரவணன் (கரும்பலகை), பெ.சுடலைமுத்து பெருமாள் (பெட்டி), ச.சேதுராமலிங்கம் (வாளி), ஜெ.துரைசிங் (கணினி), ஐ.பொன்னுதுரை (புல்லாங்குழல்), ரா.மலையாண்டி (தீப்பெட்டி), எஸ்.வின்ஸ்டன் அன்டோ (கடிதப் பெட்டி), ஜோசப் லியோன் (மோதிரம்).

ஓட்டப்பிடாரம்

ச.ஆறுமுகநயினார் - தேமுதிக (முரசு), எம்.சி.சண்முகையா- திமுக (உதயசூரியன்), பெ.மோகன் -அதிமுக (இரட்டை இலை), ர.அருணாதேவி- இந்திய ஜனநாயக கட்சி (ஆட்டோ ரிக்சா), க.கிருஷ்ணசாமி- புதிய தமிழகம் கட்சி (டிவி பெட்டி), ஆ.மகாராஜன் (வாளி), பா.முருகன் (டிராக்டர் இயக்கும் உழவன்), மு.வைகுண்டமாரி- நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), பொ.இளம்பிறை மணிமாறன் (ஒலிவாங்கி), மு.கணேஷ்குமார் (தொப்பி), சா.கருப்பராஜா (பானை), கா.குணசேகரன் (வெட்டுகிற சாதனம்), செ.சசிமுருகன் (கிரிக்கெட் மட்டை), பெ.சமுத்திரம் (தென்னந்தோப்பு), ம.அ.தர்மர் (பரிசு பெட்டகம்), வே.ராஜ் (காலணி), சு.வேல்முருகன் (மட்டைபந்து).

கோவில்பட்டி

கடம்பூர் செ.ராஜூ-அதிமுக (இரட்டை இலை), கே.சீனிவாசன்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சுத்தியும், அரிவாளும், நட்சத்திரமும்), ரா.ராமச்சந்திரன்- பகுஜன் சமாஜ் கட்சி (யானை), ச.உடையார் (டிராக்டர் இயக்கும் உழவன்), கு.கதிரவன்- மக்கள் நீதி மய்யம் (டார்ச் லைட்), மா.கோமதி மாரியப்பன்- நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), சண்முகசுந்தரம் (வாளி), டி.டி.வி. தினகரன்-அமமுக (குக்கர்), எம்.ஜி.ஆர்.நம்பி (மின்கம்பம்), ராஜ்குமார் போலையா (புல்லாங்குழல்), பா.அதிசயகுமார் (டிவி பெட்டி), ஜெ.ரவிசங்கர் ஜெயச்சந்திரன் (தீப்பெட்டி), பெ.ராமசாமி (தையல் இயந்திரம்), சு.கண்ணன் (தொப்பி), அ.காளிராஜ் (ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை), பா.குணசேகரன் (வைரம்) ஆ.சிவசுப்பிரமணியன் (கிரிக்கெட் மட்டை), பே.சுபாஷ் (ஈட்டி எறிதல்), அ.பட்டுராணி (வாக்கம் கிளீனர்), கி.பாண்டி முனீஸ்வரி (மோதிரம்), மு.பொன்னுசாமி (வாயு சிலிண்டர்), மந்திரசூடாமணி (ஆட்டோ ரிக்சா), மா.மாரிமுத்து (கப்பல்), ச.ரமேஷ் கண்ணன் (தென்னந்தோப்பு), ஜெ.எஸ்.ராஜா (கால்பந்து), சீ.ரெங்கநாயகலு (பானை).Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x