நெல்லை மாவட்டத்தில் - 13.53 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடு :

திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான வாக்கு  இயந்திரங்கள் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்திலுள்ள வைப்பறையில் இருந்து தகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. படம்: மு. லெட்சுமி அருண்.
திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான வாக்கு இயந்திரங்கள் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்திலுள்ள வைப்பறையில் இருந்து தகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. படம்: மு. லெட்சுமி அருண்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 1,924 வாக்குச் சாவடிகளில் 13,53,193 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் திருநெல்வேலி தொகுதியில் 1,42,272 ஆண்கள், 1,48,829 பெண்கள், 55 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 2,91,156 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 1,18,540 ஆண்கள், 1,25,538 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 2,44,082 வாக்காளர்களும், பாளையங் கோட்டை தொகுதியில் 1,33,203 ஆண்கள், 1,38,513 பெண்கள், 9 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 2,71,725 வாக்காளர்களும், நாங்குநேரி தொகுதியில் 1,35,752 ஆண்கள், 1,40,600 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 2,76,356 வாக்காளர்களும் உள்ளனர்.

ராதாபுரம் தொகுதியில் 1,32,615 ஆண்கள், 1,37,247 பெண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 2,69,874 வாக்காளர்கள் உள்ளனர். 5 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 6,62,382 ஆண்கள், 6,90,727 பெண்கள், 84 மூன்றாம் பாலினத்தவர் என்று மொத்தம் 13,53,193 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 1,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

திருநெல்வேலி தொகுதியில் 408 வாக்குச் சாவடிகளுக்கு தலா 490 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 545 விவிபேட் இயந்திரங்களும், பாளையங்கோட்டை தொகுதியில் 389 வாக்குச் சாவடிகளுக்கு தலா 467 வாக்குப்பதிவு , கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 518 விவிபாட் இயந்திரங்களும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 356 வாக்குச் சாவடிகளுக்கு தலா 428 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 474 விவிபாட் இயந்திரங்களும், நாங்குநேரி தொகுதியில் 395 வாக்குச் சாவடிகளுக்கு தலா 475 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 526 விவிபாட் இயந்திரங்களும், ராதாபுரம் தொகுதியில் 376 வாக்குச் சாவடிகளுக்கு தலா 452 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 501 விவிபாட் இயந்திரங்களும் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

போலீஸார் சோதனை

வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வாக்குச் சாவடிகளுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தும் கையுறைகள், தெர்மல் ஸ்கேனர், கிருமி நாசினி, கவச உடைகள் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in