குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1,500 : சிதம்பரம் அதிமுக வேட்பாளர் உறுதி

சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியிலிருந்து அதிமுக வேட்பாளர் பாண்டியன் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியிலிருந்து அதிமுக வேட்பாளர் பாண்டியன் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
Updated on
1 min read

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியன் நேற்று சிதம்பரம் நகர பகுதியில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியன் நேற்று மாலை சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து கீழவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, மேலவீதி உள்ளிட்ட நான்கு முக்கிய வீதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாஷிங்மெஷின், சோலார் அடுப்பு, குடும்பத்தலை விக்கு மாதம் ரூ.1,500, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள் ளிட்ட அனைத்து அம்சங்களும் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளில் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. திமுக மக்கள் விரோத கட்சி, ஊழல் செய்யும் கட்சி. எனவே பழனிசாமி முதல்வராக எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார். அதிமுக அவைத்தலைவர் குமார், முன்னாள் நகர செயலாளர் தோப்பு சுந்தர் மற்றும் பாமக,பாஜக உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாஷிங்மெஷின், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500 உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் செயல்படுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in