Published : 05 Apr 2021 03:15 am

Updated : 05 Apr 2021 03:15 am

 

Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் - வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரம் :

திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை சவேரியார்பாளையத்தில் இரு சக்கர வாகன பேரணியுடன் தொடங்கினார். நகரின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் திண்டுக்கல் நாகல் நகரை அடைந்தது.

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்.பாண்டி திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் இருந்து இரு சக்கர வாகனப் பேரணியுடன் பிரச்சாரத்தை தொடங்கினார். நகரின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் திண்டுக்கல் பேருந்து நிலையத்தை அடைந்தது அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.


அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராமுத்தேவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.

ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி, அதிமுக வேட்பாளர் நடராஜன் ஆகியோர் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் தும்மிச்சம்பட்டி பிரிவு அருகே அடுத்தடுத்து தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்தனர்.

பழநி தொகுதி திமுக வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் தேரடி பகுதியிலும், அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் அடிவாரம் பகுதியிலும் தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவம் வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகிலும், திமுக வேட்பாளர் காந்திராஜன் ஆத்துமேடு பகுதியிலும் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் ஆர்.விசுவநாதன் நத்தம் பேருந்து நிலையம் அருகே தனது பிரச்சாரத்தை முடித்தார்.

ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி சின்னாளபட்டி பேருந்து நிலையத்தில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். பாமக வேட்பாளர் திலகபாமா தாடிக்கொம்பு கோயில் அருகே தனது பிரச்சாரத்தை முடித்தார்.

நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் தேன்மொழி, நிலக் கோட்டை மாரியம்மன் கோயில் அருகே தனது பிரச்சாரத்தை முடித்தார். மக்கள் விடுதலை கட்சி வேட்பாளர் முருகவேல்ராஜன் துள்ளுப்பட்டி கிராமத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x