Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
மதுரை நரிமேடு பகுதியில் வசிப்பவர் மருத்துவர் பா. சரவணன். திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவாக இருந்த இவர், அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவரது தந்தையும், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலருமான பாண்டியன்(81) வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ஆனால் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஜக, அதிமுக நிர்வாகிகள், நண்பர்கள் வேட்பாளர் சரவணனுக்கு ஆறுதல் கூறினர். இன்று உடல் அடக்கம் செய்யப் படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT