Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

வருமானவரி சோதனையை திசை திருப்பி வாக்குகளை பெற நினைக்கிறது திமுக : பட்டுக்கோட்டை தொகுதியில் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

வருமான வரி சோதனையை திசை திருப்பி திமுக வாக்குகளை பெற நினைக்கிறது என பட்டுக் கோட்டை தொகுதியில் பிரச்சாரம் செய்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை சட்டப்பேரவைத் தொகு தியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர்.ரங்கராஜனை ஆதரித்து, ஆலத்தூரில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் இரவு பேசியது:

மக்கள் விரும்பும் அரசாக, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாக, தற்போதைய அதிமுக அரசு செயலாற்றி வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் நகரம் முதல் குக்கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளன. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையே இல்லாத ராசியான முதல்வராக பழனிசாமி இருந்துவருகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தாங்கள் வெற்றி பெற்ற வுடன், 2 மாதங்களில் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, உங்களின் வீட்டுக்கே கொண்டு வந்து தருவோம் என பொய்யான வாக்குறுதி அளித்து, பெண்களை ஏமாற்றியது திமுக. எனவே, நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து, திமுகவை ஏமாற்ற வேண்டும். சட்டப்பேரவை கூட்டத் தொடர்களில், மகளிர் பிரச்சினை கள் குறித்து திமுகவினர் பேசியதே இல்லை. வெளிநடப்பு என்ற வார்த்தையை மட்டுமே, அவர்கள் அதிகம் கையாண்டுள்ளனர்.

தமிழகத்தில் திமுகவினரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, அவர்களின் கூட்டணி கட்சி என்ற பாகுபாடே வருமான வரித் துறையினருக்கு கிடையாது. அவர்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் சோதனை நடைபெறுகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுவதுதான். ஆனால், வருமான வரித் துறையினரையும், அரசையும் குறைகூறி, பிரச்சினையை திசை திருப்பி திமுக வாக்குகளை பெற நினைக்கிறது. இதை வாக்காளர்கள் புரிந்துகொண்டு, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x