களக்காட்டில் - கே.எஸ்.அழகிரி பிரச்சாரம் :

களக்காட்டில்  -  கே.எஸ்.அழகிரி பிரச்சாரம் :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து களக்காட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மாலையில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது

தமிழக அரசு கடனில் உள்ள நிலையில் அதிமுக அறிவித்துள்ள இலவச திட்டங்கள் சாத்தியமில்லை. பிரதமர் நரேந்திர மோடி அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றார். ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கலால் வரி உயர்த்தப்பட்டதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

கிராமங்களில் புளியமரம், மீன்பாசி ஏலம் நடைபெறுவது போல ஏலத்தின் மூலமாக முதல்வர் பதவிக்கு வந்தவர்தான் பழனிசாமி. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1970-ல் இருந்து தனது கடும் உழைப்பின் மூலம் தற்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளராக மாறியுள்ளார்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. பணபலத்தை மக்கள் பலத்தால் முறியடிக்கும் காலம் வந்து விட்டது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in