தி.மலை மாவட்டத்தில் : கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு :

தி.மலை மாவட்டத்தில் : கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு  :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்திருந்தது. ஒற்றை இலக்கில் இருந்த தினசரி பாதிப்பானது, கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு 37-ஆக இருந்ததாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மேலும் 29 பேருக்கு தொற்று பரவி உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 19,801-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து 19,379 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 286 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in