பாலத்தின் தடுப்பில் கார் மோதி பெண் உட்பட 3 பேர் காயம் :

பாலத்தின் தடுப்பில்  கார் மோதி பெண் உட்பட 3 பேர் காயம் :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியைச் சேர்ந்ததம்பதி பன்னீர் செல்வம் ((57), ரேவதி (51), அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (57) ஆகியோர், காரில் அவிநாசி- சேவூர் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர். பந்தம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சிறு பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பன்னீர்செல்வம், ரேவதி, பழனிசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். சேவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in