

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 1071 வாக்குச்சாவடி நிலையங்களில காவல்துறையினர் பணியாற்ற கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார்.
தேர்தல் பொது பார்வையாளர்கள் பல்சானா, பார்த்த சாரதி சென்ஷர்மா, காவல்துறை பார்வையாளர் சுனில் பாஸ்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, காவல்துறை அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது ஆட்சியர் கூறியதாவது:
மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகு திகளுக்கு காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1071 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வகையில் 658 காவலர்கள், 325 தலைமை காவலர்கள் 88 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1071 காவலர்களுக்கு பணி ஒதுக்கீடு, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக சுழற்சி முறையில்பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.