

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிராமம் குள்ளம்பட்டி. இக்கிராமத்தில் நேற்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பறக்கும் படை தேர்தல் அலுவலர் பாபுசங்கர் தலைமையிலான குழுவினர் குள்ளம்பட்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 4 இளை ஞர்கள் வாக்காளர்கள் பட்டியல், திமுக வேட்பாளர் தொடர்பான துண்டு பிரசுரங்களுடன் வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பதை கண்டறிந்தனர். 4 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (30) பெருமாள் (29) இளவரசன் (23) கணேஷ் (24). என தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் மத்தூர் போலீஸார் 4 பேரையும் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.