

சிவகங்கை தொகுதி இந்திய கம்யூ. வேட் பாளர் குணசேகரனை மருத்துவ மனையில் பரிசோதித்ததில் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு, சிவகங்கையில் குணசேகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக எம்பி கனிமொழிக்கும் கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.