தேர்தல் பணி ஆணை பெற : முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :

தேர்தல் பணி ஆணை பெற : முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நாளை (4-ம் தேதி) முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பணிபுரிவதற்கு உரிய ஆணைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் வரும், 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிவதற்கு காவல்துறை, முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மற்றும் சிஎஸ்டி கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே விருப்ப விண்ணப்பம் கொடுக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் மேற்படி அலுவலகங்களில் இதுவரை விருப்ப விண்ணப்பம் கொடுக்கப்படாத முன்னாள் படைவீரர்கள் அனைவரும் நாளை (4-ம் தேதி) காலை 7 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பணிபுரிவதற்கு உரிய ஆணையை பெற வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற 04343-236134, 96778-60489 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in