

கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி பெற்று தந்த, கே.பி.முனுசாமிக்கு ஆதரவளிக்க வேண்டும் என சூளகிரியில் கர்நாடக மாநில அமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரத்தி பசவராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார். சூளகிரிநகரில் அவர் பேசியதாவது:
அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கே.பி.முனுசாமி அமைச்சராக இருந்தபோது இம்மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் கொண்டு வரப்பட்டது. சூளகிரியில் நடந்த நம் குரும்பா சமூகத்தின் நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த கே.பி.முனுசாமிக்கு வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,என்றார்.