ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளில் - விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை :

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளில்  -  விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை :
Updated on
1 min read

ஏப்ரல் 6-ம் தேதி அனைவரும் வாக்களிக்க ஏதுவாக தொழில் நிறுவனங்கள், அனைத்துக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியத் துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இதை மீறும் நிறுவனங்களை கண்காணிக்கவும்,அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறை அளிக்காத நிறுவனங் கள் தொடர்பான புகார்களை 04567-221833, 9442229502, 9940837491, 9150363461 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in