ஆமத்தூரில் அமைக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு மாதிரி வாக்குச் சாவடி மையம்.
ஆமத்தூரில் அமைக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு மாதிரி வாக்குச் சாவடி மையம்.

தேர்தலையொட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் : மகளிர் மாதிரி வாக்குச்சாவடி மையம் :

Published on

மாதிரி வாக்குச்சாவடி மையம் இளஞ்சிவப்பு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடி நிலைய அலுவலர் உட்பட அனைவரும் இளஞ்சிவப்பு நிற வண்ண உடைகளை அணிந்து பங்கேற்றனர். மேலும் வாக்காளர்கள் மூலம் வாக்கு செலுத்தும் விதம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாதிரி இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இரா.கண்ணன் திறந்துவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in