திமுக ஆட்சி அமைந்ததும் வேலைவாய்ப்பில் - தமிழர்களுக்கு முன்னுரிமை : ராஜ கண்ணப்பன் பேச்சு

பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் செ.முருகேசனை ஆதரித்து பார்த்திபனூரில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்.
பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் செ.முருகேசனை ஆதரித்து பார்த்திபனூரில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்.
Updated on
1 min read

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் செ.முருகேசனை ஆதரித்து ராஜ கண்ணப்பன் பார்த்திபனூரில் தொடங்கி விளத்தூர், நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், தொகுதிப் பொறுப் பாளர் திசைவீரன், மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் சுப.த. திவாகரன், முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுப.த.சம்பத் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

பார்த்திபனூரில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது ஆளுமைமிக்க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் வெளிமாநிலத் தவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும். மு.க.ஸ்டாலின் செய்வதைச் சொல்வார், சொல்வதைச் செய்வார். அதிமுக அமைச் சர்கள் கரோனா காலத்திலும் ஊழல் செய்துள்ளனர். இதற்காக ஆட்சி மாற்றம் வேண்டும். எனவே திமுகவை ஆதரியுங்கள், என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in