

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும்படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 2258 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் வழங்குவதை தடுக்கும் வகையில், 6 தொகுதிகளிலும் பறக்கும் படை அலுவலர்கள், துணை ராணுவத்தினர் கொண்ட குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பர்கூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜெகதேவி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் அண்ணா துரை தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கர்நாடக மாநிலம் டும்கூரில் இருந்து அச்சமங்கலம் அருகே கிரானைட் கல் வாங்குவதற்காக, குருலிங்கப்பா என்பவரிடம் ரூ.2 லட்சம், ஈஸ்வரப்பா என்பவரிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம், பிரேம்குமார் என்பவரிடம் ரூ. 2 லட்சத்து 2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 52 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கிய லட்சுமி மூலம் கருவூலத்தில் ஒப்படைத் தனர்.
தளியில் ரூ.96 ஆயிரம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேன்கனிக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் மூலமாக தேன்கனிக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.