பணம், இலவச பொருட்களை எதிர்பார்த்தால் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது : புதுக்கோட்டையில் விஜயபிரபாகரன் பிரச்சாரம்

பணம், இலவச பொருட்களை எதிர்பார்த்தால் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது :  புதுக்கோட்டையில் விஜயபிரபாகரன் பிரச்சாரம்
Updated on
1 min read

பணத்தையும், இலவச பொருட்களையும் மட்டுமே எதிர்பார்ப் போமேயானால், கடவுளே வந்தாலும் மக்களை காப்பாற்ற முடியாது என தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுப்பிரமணியனுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், வெட்டன்விடுதி, புதுப்பட்டி, மழையூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:

பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட லாம் என்ற நம்பிக்கையில் சிலர் தேர்தல் களத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால், மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். வாக்குக்கு சொற்ப ரூபாயைக் கொடுத்துவிட்டு, உங்களை வாழ்நாள் முழுக்க லாக்டவுனில் தள்ளிவிடுவார்கள்.

ஒவ்வொரு இலவச பொருளின் பின்னாலும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நிறைந்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் மாற்றுத் துணிக்கே வழியின்றி இருக்கும்போது, வாஷிங்மிஷின் கேட்டார்களா?. அதற்கான மின்கட்டணத்தை செலுத்துவது யார்? பணத்தையும், இலவசப் பொருட்களையும் மட்டுமே எதிர்பார்ப் போமேயானால், கடவுளே வந்தாலும் மக்களை காப்பாற்ற முடியாது. எனவே, இவற்றுக்கு மாற்றாக மக்களுக்கு சேவையாற்று கின்ற எங்களை ஆதரியுங்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in