கஜா புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை கைவிட்டது அதிமுக அரசு : முன்னாள் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை கைவிட்டது அதிமுக அரசு :  முன்னாள் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து, கறம்பக்குடியில் நேற்று நடை பெற்ற பிரச்சாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி பேசியது:

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு மூலமும், விவசாயிகள் மற்றும் விவசாயத்தை புதிய வேளாண் சட்டம் மூலமும், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை குடியுரிமைச் சட்டம் மூலமும் பாஜக அரசு தகர்க்கிறது. மத்திய அரசின் இத்தகைய செயல்களை தடுப்பது, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலை மையில் ஆட்சி அமைந்தால்தான் சாத்தியம்.

கஜா புயலின்போது, அரசின் நிவாரணம் ஆளும் கட்சியினருக்கு மட்டும் கிடைத்ததே தவிர, அப்பாவி மக்களுக்கு கிடைக்கவில்லை. அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்த விவசாயிகள், சுயஉதவிக் குழு பெண்களுக்கு, அப்போதே கடன் தள்ளுபடி செய்திருந்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்திருக்க மாட்டார்கள். பாதிக்கப்பட்டோருக்கு வீடு கட்டிக்கொடுக்கவில்லை. புய லால் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக அரசு கைவிட்டுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

இதேபோல, சின்னதுரையை ஆதரித்து, கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் தலைமையில், அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீர பாண்டியன் பிரச்சாரம் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in