Published : 03 Apr 2021 03:15 AM
Last Updated : 03 Apr 2021 03:15 AM

விவிபாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு :

பெரம்பலூர்

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.வெங்கட பிரியா தலைமையில், பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத் தில் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து ஆட்சியர் கூறியபோது, “பெரம்பலூர் தொகுதி யில் 548, குன்னம் தொகுதியில் 497 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன” என்றார்.

குன்னம் தொகுதி பொதுப் பார்வையாளர் எஸ்.தேஜஸ்வி நாயக், பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.இ.பத்மஜா உடனிருந்தனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x