திமுகவை வழி நடத்த தெரியாதவர் தமிழகத்தை எப்படி வழி நடத்துவார் : ஆரணியில் அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Updated on
1 min read

திமுகவை வழி நடத்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்துள்ள மு.க.ஸ்டாலின், தமிழகத்தை எப்படி வழி நடத்துவார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள பழனிசாமி, ஒரு விவசாயி, திமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள மு.க.ஸ்டாலின், ஒரு அரசியல் வியாபாரி. இந்த தேர்தல் ஒரு விவசாயிக்கும், ஒரு அரசியல் வியாபாரிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். விவசாயிகள், பாட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் என நெற்றில் வியர்வையை சிந்தும் அனைவரும் நம் பக்கம் உள்ளனர். ஏசி அறையில் உள்ளவர்கள் திமுக பக்கம்உள்ளனர். அவர்கள் தொழிலதிபர் கள், முதலாளிகள். விவசாயி வெற்றி பெற வேண்டும். முதலமைச்சராக வர வேண்டும் என ஸ்டாலின் துடிக்கிறார். எனது தம்பிகள் விடமாட்டார்கள். முதலமைச்சராக வர தகுதி வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதிதான் ஸ்டாலினுக்கு உள்ளது. வேறு எந்த தகுதியும் இல்லை. விவசாயி என்ற தகுதி பழனிசாமிக்கு உள்ளது.

சமூக நீதி அடிப்படையில்தான், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. 40 ஆண்டுகால பாமக நிறுவனர் ராமதாசின் உழைப்பு, 21 பேரது உயிர் தியாகத்துக்கு வன்னியர் சமூகத்துக்கு முதற் கட்டமாக 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

விரக்தியில் திமுக நிர்வாகிகள்

ஆ.ராசா மீது நடவடிக்கை இல்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in