தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு - கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பிவைப்பு :

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு -  கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பிவைப்பு :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக 3 சட்டப்பேரவைத்தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்ட பின்னர் கூறும்போது, “உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய3 சட்டப்பேரவைத் தொகுதிகளில்மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன.இங்கு பணியாற்றுபவர்களுக்கு வழங்குவதற்காக 911 உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி, கை சுத்தம் செய்வதற்காக 500 மி.லி. கொண்ட 6,000 சானிடைசர் பாட்டில்கள், 7,03,300 கையுறைகள், 11,712 கவச உடைகள் மற்றும் 26,040 முகக்கவசங்கள் வந்துள்ளன.

ஒரு வாக்குச்சாவடிக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி 1, 500 மி.லி. சானிடைசர் 7 பாட்டில்கள் மற்றும் 100 மி.லி. சானிடைசர் 11 பாட்டில்களும், 1,200 கையுறைகள் மற்றும் முகக் கவசங்கள் வீதம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கபடுகிறது” என்றார். நிகழ்வில்துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்ணன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in