பிரதமர் குறித்து அவதூறு உதயநிதி ஸ்டாலின் மீது புகார் :

பிரதமர் குறித்து அவதூறு உதயநிதி ஸ்டாலின் மீது புகார் :
Updated on
1 min read

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் முருகேசன்,அ.ரமேஷ் ஆகியோர் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜனிடம் நேற்று அளித்த மனுவில், "காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதனை ஆதரித்து, சென்னிமலையில் நேற்று முன்தினம் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் காட்டி இது என்ன நோட்டுன்னு தெரியுதா, இந்த பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை நான் ஏன் வைத்திருக்கேன் தெரியுமா? இதை பார்க்கும்போது எல்லாம் பிரதமர் மோடி மீது கொலை வெறி வரும் என்று கலவரத்தை தூண்டும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமரின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

மேலும், தடை செய்யப்பட்ட நோட்டை வைத்திருப்பது குற்றம் என தெரிந்தும், அவரே கைவசம் வைத்துள்ளார்.

பிரதமரை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in