திமுக வேட்பாளரை ஆதரித்து - செங்கல்பட்டு நகரில் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம் :

திமுக வேட்பாளரை ஆதரித்து செங்கல்பட்டு நகரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்  எஸ்.கே.மகேந்திரன் பேசினார்.
திமுக வேட்பாளரை ஆதரித்து செங்கல்பட்டு நகரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார்.
Updated on
1 min read

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ம.வரலட்சுமிக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதிக் குழுவின் சார்பில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது, தெருமுனை பிரச்சாரம், என தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் பகுதி செயலாளர்கே.வேலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோனன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், திமுக நகர செயலாளர்நரேந்திரன், காங்கிரஸ் நகர செயலாளர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர்கள் எம்.ரவி, கலைச்செல்வி, என்.அன்பு உள்ளிட்ட பலர் பேசினர்.கூட்டத்தை நிறைவு செய்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in