செங்கை மாவட்டத்தில் - 27 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம் :

செங்கை மாவட்டத்தில்   -  27 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம் :
Updated on
1 min read

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் விநியோகம் செய்ய வாக்காளர் தகவல் சீட்டு அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 27 லட்சத்து 16 ஆயிரத்து 385 வாக்காளர்கள் உள்ளனர். தகவல் சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்ள மேற்பார்வையாளர்கள், பொறுப்பு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தகவல் சீட்டு வழங்கப்படும்.

இந்த தகவல் சீட்டில் வாக்காளரின் பெயர், பாலினம், தொகுதி பெயர், பாகம் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், வரிசை எண், வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்களுடன் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சீட்டின் பின்புறம் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர் மற்றும் செல்போன் எண் இடம் பெற்றிருக்கும்.

இந்த தகவல் சீட்டை கொண்டு சென்று வாக்களிக்க இயலாது. தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். 5-ம் தேதிக்குள் வீடு தேடி வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்குவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in