பித்தளை, வெள்ளி பாத்திர தொழில் குடிசை தொழிலாக்கப்படும் : விழுப்புரம் திமுக வேட்பாளர் லட்சுமணன் உறுதி

விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் லட்சுமணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் பேசுகிறார்.
விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் லட்சுமணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் பேசுகிறார்.
Updated on
1 min read

விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆபரண தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பித்தளை பாத்திரம் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட விஸ்வகர்ம கட்சி தொழிலாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசியது:

திமுகவின் தேர்தல் அறிக்கை யின் தெரிந்துள்ளவாறு இந்து அறநிலையத்துறை கோயில்களில் விஸ்வகர்மா சமூகத்தினருக்கு அறங்காவலர் குழு பதவி வழங்கப்படும். பித்தளை பாத்திர தொழில் மற்றும் வெள்ளி பாத்திர தொழிலை குடிசை தொழிலாக மாற்றி நலத்திட்டங்களை பெற்று தருகிறேன் என்று உறுதி அளித்தார். அப்போது முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ், திமுக நகர செயலாளர் சக்கரை, கைவினை முன்னேற்றக் கட்சியின் தலைவர் பாலு, அமைப்பாளர் உமாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in