

சிவகங்கை தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் குணசேகரனை ஆதரித்து காளையார்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் தமிழக சரித்திரத் திலும், இந்திய சரித்திரத்திலும் முக்கியமான தேர்தல். தமிழக மக்களின் தீர்ப்பு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையப் போகிறது. இதன் மூலம் தமிழக ஆட்சி மாற்றம் மட்டுமின்றி, மத்திய பாஜக ஆட்சியின் வீழ்ச்சிக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது.
தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என பாஜக பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தமிழகத்துக்குப் படையெடுத்து வருகின்றனர்.
பெரியார் மண்ணில் மதவாத அரசியல் எடுபடாது என்பதால் அவர்களுக்கு பெரும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்து பேசுகின்றனர்.
இந்திய அரசு மக்கள் நல அரசாக இருக்க வேண்டுமென அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் மோடி அரசு மக்கள் விரோத அரசாக மாறியுள்ளது என்று கூறினார்.