திருவள்ளூர் அருகே : மின்சாரம் பாய்ந்து வயர்மேன் உயிரிழப்பு :

திருவள்ளூர் அருகே : மின்சாரம் பாய்ந்து வயர்மேன் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருவள்ளூர் அருகேயுள்ள பூண்டியை சேர்ந்தவர் உமாபதி(47). இவர், மின் வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வயர்மேனாகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு புல்லரம்பாக்கம் ஜெ.ஜெ.நகரில் உள்ள மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக, உமாபதியும், லைன்மேன் பென்னலூர்பேட்டை ஏழுமலையும் சென்றனர்.

மின் மாற்றி மீது ஏறி உமாபதி பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உமாபதியின் கைகள் உரசியதால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in