குழந்தைகளை ஈடுபடுத்த தடை :

குழந்தைகளை ஈடுபடுத்த தடை :
Updated on
1 min read

தேர்தல் பணிகளுக்குக் குழந்தை களைப் பயன்படுத்துவது என்பது அவர்களை அவமதிப்பதாகும். அவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் கருதப்படும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பிரசுரங்கள் விநியோகம், ஊர்வலம் செல்லுதல், கூட்டங்களுக்கு அழைத்து வருதல் போன்ற தேர்தல் பணிகளுக்குக் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதை அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in