மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை :

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை :

Published on

மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் உலகநீதி(52). கட்டுமானத் தொழிலாளியான இவர், 2017 செப்.13-ம் தேதி தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு, அவரது தலை, கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை வெட்டியெடுத்து கொலை செய்தார்.

இதுதொடர்பாக வடுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, உலகநீதியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், உலகநீதிக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, உலகநீதியை போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in