

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு சென்னையில் நடக்கிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022 பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 5-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும், எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. நேர்முகத் தேர்வு அறிவுக் கூர்மை மற்றும் தனித்தன்மையை ஆராய்வதாக இருக்கும்.
எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் வருகிற அக்டோபர் மாதம் 6-ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை “கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட், பின்கோடு