

புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை.கி. சரவணன் கூட்டணிக் கட்சி நிர்வாக ளுடன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அண்மையில, புவனகிரி திமுக வேட்பாளர் சரவணனுக்கு கரோகா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதனால் அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பதிலாக அவரது மனைவி சுமதி சரவணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த 2 நாட்களாக சரவணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று புவனகிரி மேற்குஒன்றிய கிராமமான அழிசிக்குடிகிராமத்தில் வாக்கு சேகரிப்பைதொடங்கிய அவர், நாலாந் தெத்து, பெரியமேடு, வண்டுராயன்பட்டு, பு.உடையூர், வத்தராயன் தெத்து, தலைக்குளம், உளுத் தூர், பிரசன்னராமாபுரம், அம் பாள்புரம் உள்ளிட்ட10-க்கும் கிராமங்களுக் குச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பெண்கள் ஏராளமானோர் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அவர்களது வரவேற்பை பெற்றுக் கொண்டு பேசிய சரவணன் எம்எல்ஏ, “கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு விட்டது.தமிழகம் விடியலைப் பெற, தலைவர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.
ஒன்றிய திமுக செயலாளர்கள் மதியழகன், திருமாவளவன், புவனகிரி நகர செயலாளர் கந்தன், ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அப்பா ரவிக்குமார் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.