

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளான அகரம் ரெயிலடி பகுதியில் தமது தேர்தல் பிரச்சாரத் தினை அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் நேற்று அதிமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் தொடங்கினார்.
தொடர்ந்து அகரம் காலனி, மானம்பாடி, சிவன்படத் தெரு, சேவமந்திர், வன்னாரப்பாளையம், கொத்ததெரு, குமத்துபள்ளி தெரு, பெரிய கடை தெரு, சஞ்சீவராயர் கோயில், ரெங்கப்பிள்ளை மண்ட பம், வாத்தியாபள்ளி, மாதா கோயில் தெரு, ஆரியநாட்டு கிழக்கு தெரு, சலங்ககார தெரு, கொடிமரத்தெரு, டெல்லி சாகிப் தெரு மற்றும் அரிய கோஷ்டி கொய்யா தோப்பு உள்ளிட்ட18 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது அதிமுக வேட்பாளர் பாண்டியன் பேசுகையில், “முதல்வர் பழனிசாமி அரசு மக்கள் நல அரசாகும். மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்திய அரசாகும். அதி முக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் மக்களுக்கு கிடைத்திட எனக்கு வாக்களியுங் கள்” என்றார். அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், நகர அதிமுக செயலாளர் மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் ராசாங்கம் மற்றும் அதிமுக, கூட் டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.