இயந்திரத்தில் : சின்னங்கள் பொருத்தும் பணி :

இயந்திரத்தில்  : சின்னங்கள் பொருத்தும் பணி :
Updated on
1 min read

தேனி மாவட்ட 4 தொகுதிகளிலும் 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 576 இடங்களில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. நோட்டாவையும் சேர்த்து ஆண்டிபட்டி தொகுதியில் 21 சின்னங்கள், பெரியகுளம் மற்றும் கம்பத்தில் தலா 16 சின்னங்கள், போடியில் 25 சின்னங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதில் பார்வையற்றவர்கள் வாக்களிக்க பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட வில்லைகளும் ஒட்டப்பட்டன. ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் போடி அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in