தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கல் :

தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கல் :
Updated on
1 min read

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் வெ.செந்தமிழ்செல்வி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அளவில் 2018-2019, 2019-2020 ஆகிய கல்வியாண்டியில் தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள் 52 பேர் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக அளவில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள், அதற்கு மேல் தர வரிசையில் இடம்பெற்ற மாணவர்களுக்கு என மொத்தம் ரூ.5,32,500 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் ரெ.கோவிந்தராசு, கல்லூரி தேர்வு நெறியாளர் வே.புகழேந்தி, முன்னாள் மாணவர் சங்க செயலாளர் வீ.முருகேசன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in