‘சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்’ :

‘சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்’ :
Updated on
1 min read

ஜாக்டோ - ஜியோ திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒ.சுந்தரமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்காக திருப்பூர் மாவட்டத்தில் அவரவர் பணியிடத்திலிருந்து 90 கி.மீ.க்கு அப்பால் ஆசிரியர்களை வரவழைத்து உத்தரவு பிறப்பித்தார்கள்.

கரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பயிற்சி வகுப்புகளை இப்படி தொலைதூரத்தில் அமைத்திருப்பது வேதனை அளிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஆண் ஆசிரியர்களைவிட பெண் ஆசிரியர்களே அதிகம். உடுமலைப்பேட்டையில் உள்ளவர்களை காங்கயம் தொகுதிக்கும், அவிநாசி மற்றும் திருப்பூரில் உள்ளவர்களை உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கும், தாராபுரம் அருகே உள்ளவர்களை திருப்பூர், அவிநாசி பகுதிகளுக்கும் அலைக்கழிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மேற்கண்ட மையங்களின் சில இடங்களில் குடிநீர் வசதிகூட செய்துதரப்படவில்லை. எனவே, இனிவரும் பயிற்சி மற்றும் தேர்தல் பணியின்போது 40 கி.மீ.க்குள் நியமித்து உத்தரவிட்டும், தபால் வாக்குகளை முறைப்படுத்தி வழங்காமல் காலம் தாழ்த்துவது, எங்கள் சமுதாயக் கடமையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. இதனை முறைப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in