சட்டப்பேரவை தேர்தலுக்காக 4 நாள் மதுக் கடைகளை மூட உத்தரவு :

சட்டப்பேரவை தேர்தலுக்காக 4 நாள் மதுக் கடைகளை மூட உத்தரவு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 4 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் பொதுத் தேர்தல் அமைதியாகவும், சுமூகமா கவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடை பெறுவதை உறுதி செய்யும் வகையில், வருகிற ஏப்ரல் 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி (வாக்கு பதிவு நாள்) நள்ளிரவு 12 மணி வரையும் என 3 நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற மே மாதம் 2-ம் தேதி ஆகிய 4 நாட்கள் மதுபானம் விற்பனை இல்லா தினங்களாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்), மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்து வகை இந்திய தயாரிப்பு அயல்நாட்டு ஸ்பிரிட், பீர் மற்றும் வைன் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யவோ அல்லது மதுபானங்கள் வாகனங்கள் மூலம் இடப்பெயர்வு செய்யவோ கூடாது.

மேலும், அரசு மற்றும் தனியார்ஓட்டல்களின் அனைத்து மதுபான கூடங்களை மூட உத்தரவிடப் படுகிறது. இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக் கடைகளை திறந்தாலும், விற்றா லும் அவர்கள் மீது அரசு விதிமுறைகளின்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in