

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிகள், ஆசிரியர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி ஒன்றியம் சின்னமேலுப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியின் தந்தைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் இப்பள்ளியில் நேற்று நடக்க இருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே கரோனா பரவலைத் தடுக்க கடந்த 10 நாட்களுக்கு முன்னர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை நடந்து வந்த வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.