கரூரில் காவல் துறை கொடி அணிவகுப்பு :

கரூரில் காவல் துறை கொடி அணிவகுப்பு :

Published on

கரூரில் நேற்று காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, கரூர் தொகுதி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர் களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையிலும் கரூர் நகர காவல் நிலையம் சார்பில் கரூர் ஐந்து சாலை பகுதியிலிருந்து காவல்துறையினர் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் முகேஷ்ஜெயகுமார் (கரூர் நகரம்), அய்யர்சாமி (ஆயுதப்படை), இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். கொடி அணிவகுப்பில் ஆந்திர மாநில சிறப்பு காவல் படையினர், கரூர் மாவட்ட காவல் துறையினர், ஆயுதப்படை காவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கருப்பாயி கோயில் தெரு, மாவடியான் கோயில் தெரு, ஜவஹர் பஜார், கரூர் நகர காவல் நிலையம், சர்ச் முனை, வெங்கமேடு வழியாக சென்று என்எஸ்கே நகரில் அணிவகுப்பு நிறைவடைந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in