பொதுமக்களுக்கு இடையூறாக - கட்டுமான கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறாக -  கட்டுமான கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை :  தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை
Updated on
1 min read

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கட்டுமானக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது. இதனை முறையாக சேகரித்துஅப்புறப்படுத்தும் பணிக்காக மாநகராட்சிக்கு சொந்தமான 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி எஸ்டிஏ பள்ளி அருகில், மேக் கார்டன், ஆதிபராசக்தி பூங்கா, ரஹ்மத் நகர்ராம் நகர் பூங்கா, கதிர்வேல் நகர் பகுதி பூங்கா, அம்பேத்கர் நகர், ஓம்சாந்தி நகர்பூங்கா, மார்ட்டினா நகர் பூங்கா, அய்யாச்சாமி பூங்கா, மடத்தூர் சாலை சந்திப்பு தாழ்வான பகுதிகள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடமான மீன்வளக் கல்லூரிஎதிர்புறம், சுந்தரவேல்புரம் பூங்கா இடம், தருவைகுளம், புல் தோட்டம், தமிழ்சாலையில் உள்ள மாநகராட்சி இடுகாடு வளாகம் வடமேற்கு தாழ்வான பகுதி ஆகிய 15 இடங்களில் மட்டுமே கட்டுமானக் கழிவுகளைக் கொட்ட வேண்டும்.

இதை தவிர்த்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானம் மற்றும் கட்டுமான இடிபாடு கழிவுகளை மேலாண்மை விதிகளுக்கு முரணாக பொது இடங்களில் கொட்டி சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in