Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM

மாற்றுத்திறனாளிகள் செயலி அறிமுகம் :

சிவகங்கை மாவட்ட தோ்தல் அலுவலர் பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகள் தங்களது ஸ்மார்ட் போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் ‘PWD ’ என்ற பிரத்யேக செயலியை பதிவிறக்கம் செய்து சட்டப்பேரவைத் தேர்தல் தொடர் பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தச் செயலி மூலம் வாக்குச் சாவடி, தொகுதி மாற்றம் போன்ற கோரிக்கையை பதிவு செய்யலாம்.

மேலும் வாக்காளர் அட் டையில் திருத்தம் செய்யவும், வாக்குப்பதிவு அன்று வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலி வசதி கோரவும், உதவி அழைப்பு மைய விவரங்களை தெரிந்து கொள்ளவும் பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x