கிருஷ்ணகிரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி :

கிருஷ்ணகிரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் -  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தன.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக் கான 2--ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 1, நிலை - 2 மற்றும் நிலை - 3 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 11,032 அலுவலர் களுக்கான 2-ம் கட்டப் பயிற்சி அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறு கிறது.

இவர்களுக்கு மண்டல அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இப்பயிற்சில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம் மற்றும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து படிவங்க ளையும் நிரப்புவது குறித்தும், வாக்குசாவடி அலுவலர்களிட மிருந்து தபால் வாக்குகளுக் கான படிவங்கள் பூர்த்தி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சி யினை பெற்று தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இப்பயிற்சியின் போது ஒரு அறைக்கு 20 பேர் வீதம் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in