

செட்டிக்குளம் பால தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் நேற்று பங்குனி உத்திர விழா தேரோட்டம் நடை பெற்றது. இதில், திரளான பக்தர் கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக் குளத்தில் மலை மீது அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோயிலில் கடந்த மார்ச் 20-ம் தேதி கொடி யேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மூலவருக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் ஆராதனை, சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் அதிகாலை முதல் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர், முருகன், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பால தண்டாயுதபாணி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
மதனகோபால சுவாமி கோயிலில்..