ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் : ரவி பச்சமுத்து வேண்டுகோள்

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் :  ரவி பச்சமுத்து வேண்டுகோள்
Updated on
1 min read

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சசிகலாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஓட்டுக்காக யாரும் பணம் வாங்காதீர்கள். அதைவிட பெரிய குற்றம் வேறு எதுவுமில்லை. வருமானம் பெருகினால் இலவசம் தேவையில்லை. இலவசத்துக்கு கொடுக்கும் பணத்தைக் கொண்டு கல்விச் சாலைகளும், தொழிற் சாலைகளும் அமைக்கலாம். அதுவே, இந்திய ஜனநாயக கட்சியின் நோக்கம் என்றார்.

இதேபோல, அரியலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜவகரை ஆதரித்து அரியலூர் மற்றும் வி.கைகாட்டியில் ரவிபச்சமுத்து பேசும்போது, ‘‘எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால், அரியலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக் கையான கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டித்தரப்படும். முந்திரி தொழிற்சாலை அமைத்து அதற்கான முழு பலன்களையும் விவசாயிகளே பெறுவதற்கு கூட்டுறவு பண்டக சாலை அமைக்கப்படும். ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்கு கையகப்படுத்தப் பட்ட நிலங்களின் உரிமையாளர் களுக்கு தற்போதைய சந்தை மதிப்பீட்டு தொகை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in