

வல்ல நாட்டில் உள்ள வெளிமான் சரணாலயத்தில் தற்போது 320 மான்கள் இருப்பது 2 நாட்கள் நடத்தப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வெளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த சரணாலயத்தில் 2 ஆண்டு களுக்கு ஒருமுறை வன உயிரின ங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது. வனச்சரக அலுவலர் விமல்குமார் தலைமையில், வனக்காப்பாளர்கள், தோட்டக் காவலர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 35 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
2 நாட்கள் நடைபெற்ற கணக் கெடுப்பின் முடிவில் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வெளி மான்கள் 243, புள்ளிமான்கள் 47, கடமான்கள் 30 இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர நரி, முயல் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் காணப்படுவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.