Regional02
வேலூரில் பெண்ணிடம் : நகை பறிப்பு :
வேலூரில் பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (44). இவரது மனைவி ஷண்முகப்பிரியா (37). இவர், வேலூர் மக்கான் அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஷண்முகப்பிரியா கொண்டு சென்ற கைப்பையை பறித்துச்சென்றார். அந்த பையில் இரண்டரை பவுன் எடையுள்ள தங்க நகை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷண்முகப்பிரியா வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஷண்முகப் பிரியா புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
