

செஞ்சி அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத் தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின் றனர். இக்கிராமத்தில் மத்திய ஜல்சக்தி துறையின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் புதிய குழாய் பதிப்பை கண்டித்தும், அதனால் 2 வார மாக குடிநீர் விநியோகம் அளிக்காததை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக் கோரியும் நேற்று காலை வேட்டவலம் - செஞ்சி பிரதானசாலையில்,சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. அரசு பேருந்தையும் சிறை பிடித்தனர்.
இத்தகவல் அறிந்த நல்லான்பிள்ளை பெற்றாள் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.ஊராட்சி ஒன்றிய அலு வலர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறிபோராட்டத்தை தொடர்ந் தனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதால் சாலைமறியல் கைவிடப் பட்டது.
இதனால் வேட்டவலம் - செஞ்சி சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது.