நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு :

நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டில் மான்கள் அதிக அளவு காணப்படுகின்றன. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு இரண்டரை வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புள்ளிமான் இரை தேடி வந்துள்ளது.

அப்போது அங்கிருந்த நாய்கள், மானை துரத்தி கடித்துள்ளன. அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நாய்களை துரத்தி விட்டு, மானை மீட்டனர். இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வனத் துறையினர் வருவதற்குள் புள்ளிமான் உயிரிழந்தது. இதனால், புள்ளிமான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in